`எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்.பி அலுவலகம் முற்றுகை!’ - 4 எம்.எல்.ஏ-க்கள் அறிவிப்பு

`பாரத் பந்த்’தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ சுரேஷ்ராஜனிடம் சண்டையிட்ட சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் வரும் 17-ம் தேதி எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக 4 எம்.எல்.ஏ-க்கள் அறிவித்துள்ளனர்.

சுரேஷ்ராஜன்

காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாகர்கோயிலில் நடந்தது. அதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று நடந்த பாரத் பந்த்தில் கைதான தொண்டர்களைப் பார்வையிடச் சென்ற சுரேஷ்ராஜனை அவதூறாகப் பேசி தாக்க முற்பட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 17-ம் தேதி எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ரஜன், பிரின்ஸ், ராஜேஷ்குமார், ஆஸ்டின் ஆகியோர் நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சுரேஷ்ராஜன்

பின்னர் சுரேஷ்ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாகர்கோவிலில் அனைத்துக்கட்சி சார்பில் நடந்த மறியலில் கைதானவர்களை பார்க்கச் சென்றேன். அப்போது குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி அங்குவந்து, `உடனே கலைந்து செல்லுங்கள். இல்லையென்றால் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுவேன்’ என்று மிரட்டினார். எங்களை ஏன் மிரட்டுகிறீர்கள் எனக் கேட்டதற்கு கெட்டவார்த்தையால் திட்டினார். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்ட முத்துமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!