வெளியிடப்பட்ட நேரம்: 01:50 (12/09/2018)

கடைசி தொடர்பு:01:50 (12/09/2018)

மாமன்னன் கரிகாலன் குளித்த குளத்துக்கு தண்ணீர் வருமா? காத்திருப்பில் பொதுமக்கள்

நீரின் தேவையை பண்டைய காலத்திலேயே உணர்ந்து சோழ மன்னர்களில் ஒருவரான மாமன்ன் கரிகாலசோழனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டப்பட்டது கல்லணை.மிகப்பெரிய தொழில் நுட்பத்தோடு கட்டப்பட்ட இந்த அணையை இன்றளவும் அதிசயம் விலகாமல் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.மேலும் டெல்டா பகுதியின் நீர் ஆதாரத்திற்கு மிகப் பெரிய சக்தியாகவும் விளங்கி வருகிறது.தற்போது காவிரியில் கரைபுரண்ட தண்ணீர் அரசின் அக்கறையின்மையால் வீணாக கடலில் கலந்தது.குளம் மற்றும் ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கரிகாலன் தன் உடலில் ஏற்பட்ட தோல் நோய் நீங்க 45 நாட்கள் நீராடிய புரதானம் வாய்ந்த குளத்தில் கூட தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த பத்து ஆண்டுகளாகவே குளம் வறண்டு கிடப்பதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது

நீரின் தேவையை பண்டைய காலத்திலேயே உணர்ந்து சோழ மன்னர்களில் ஒருவரான மாமன்னன் கரிகாலசோழனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டப்பட்டது கல்லணை. மிகப்பெரிய தொழில் நுட்பத்தோடு கட்டப்பட்ட இந்த அணையை இன்றளவும் அதிசயம் விலகாமல் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் டெல்டா பகுதியின் நீர் ஆதாரத்திற்கு மிகப் பெரிய சக்தியாகவும் விளங்கி வருகிறது. தற்போது காவிரியில் கரைபுரண்ட தண்ணீர் அரசின் அக்கறையின்மையால் வீணாகக் கடலில் கலந்தது. குளம் மற்றும் ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரிகாலன் தன் உடலில் ஏற்பட்ட தோல் நோய் நீங்க  45 நாட்கள் நீராடிய புரதானப் புகழ் வாய்ந்த குளத்தில் கூட தண்ணீரை நிரப்ப  நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த பத்து ஆண்டுகளாகவே குளம்  வறண்டு கிடப்பதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் கரந்தைப் பகுதியில் 1,400 ஆண்டு பழமையானதும், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற ஸ்தலமான பிரசித்தி பெற்ற கருணாசாமி கோயில் உள்ளது. இதன் அருகிலேயே கோயிலுக்குச் சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த குளம் உள்ளது. சோழ மன்னர்களில்  ஒருவரான கரிகால சோழனுக்கு கருங்குஷ்டம் என சொல்லப்படும் தோல் நோய் இருந்துள்ளது. அவர் அந்த நோயை தீர்க்க பல மருத்துவமுறையை கையாண்டும் எந்தப் பலனுமில்லை. இந்த நிலையில் ஒருநாள் கரிகால சோழன் கனவில் தோன்றிய கடவுள், கருணாசாமி கோயில் குளத்தில் 45 நாட்கள் நீராடினால், தோல் நோய் நீங்கும் என தெரிவித்தார். இதனையடுத்து கரிகாலசோழன் அந்த குளத்தில் நீராடினார். அதன் பிறகு அவருக்கு  தோல் நோய் நீங்கியது என்பது பலரும் நம்பும் வரலாறு. அப்போதில் இருந்தே இந்த குளத்தில் நீராடி இங்குள்ள வசிஷ்டேஸ்வரரை வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

அதோடு இப்பகுதிக்கு மிகப்பெரிய நீர் ஆதரமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இந்தக் குளம் கடந்த பத்து வருடங்களாக வறண்டு கிடக்கிறது என்று வேதனை தெரிவிக்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதுகுறித்து சிலரிடம் பேசினோம், 'கரிகால சோழன் குளித்த குளம் என்ற பெருமை மட்டும் தான் இந்த குளத்திற்கும் கோயிலுக்கும் உள்ளது. குளத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடவாறில் இருந்துதான் இங்கு தண்ணீர் வரும். அந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பில் இருப்பதும் தண்ணீர் வரும் வழி தடம் பராமரிக்காமல் விட்டதே இதற்கு காரணம். கடந்த 5 வருடத்திற்கு முன்பு வரை இந்தப் பகுதியில் ஐந்து அடி தோண்டினாலே தண்ணீர் வரும் இப்போது நிலத்தடி நீர் ஆழத்திற்கு சென்றுவிட்டது. காரணம் பல ஆண்டுகளாக குளம் வறண்டு கிடப்பதுதான்.

நாங்கள் அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தன் பலனாக சில வருடங்களுக்கு முன்பு ஆற்றில் இருந்து குழாய் பதித்து தண்ணீர் நிரப்ப நிதி ஒதுக்கினார்கள். வேடிக்கை என்ன வென்றால் 5 ஏக்கர் அளவு கொண்ட குளத்திற்கு ஆறு  இஞ்ச் பி.வி.சி பைப் கொண்டு பூமிக்கடியில் பதித்தனர்.குளத்தில் தண்ணீர் நிரப்புவதை ஒரு விழாவாக எடுத்தனர். இதற்காக அப்போதைய அமைச்சர் வைத்திலிங்கம் வந்தார். குழாயில் பம்ப் வைத்து தண்ணீர் செலுத்தபட்டது. அவை குளத்தின் முழு பகுதி தரை கூட நினைக்கவில்லை. ஆனால் கரிகாலன் சோழன் குளித்த குளத்தில் தண்ணீர் நிரப்பி விட்டோம் என்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

நாங்கள் மீண்டும்  முறையிட்டோம். குழாய் பதித்த திட்டம் பெயிலியர் ஆகிவிட்டது. குளத்தை சீரமைக்க ஒரு கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, குளத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக நடைபாதை, மின் விளக்குகள் எனப் புதிய பொலிவுடன் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றனர். ஆனால் இன்றும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வறண்ட பூமியாய் கிடக்கிறது. கலெக்டர் தொடங்கி கவர்னர் வரை மனு கொடுத்தோம் எந்த பயனும் இல்லை.வேதனை என்னவென்றால் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. 200 டிஎம்சி வரை கொள்ளிடம் ஆற்றில் சென்று வீணாக கடலில் கலந்ததாக சொல்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் ஏரி, குளங்களில் எல்லாம் தண்ணீர் நிரப்படும் என தெரிவித்தது. ஆனால் கரிகாலன் பயன்படுத்திய குளத்திற்கே இன்னும் தண்ணீர் வரவில்லை. பத்து ஆண்டுகளாக இப்படியேதான் கிடக்கிறது என வேதனையோடு தெரிவித்தனர். பாரம்பர்யத்தை காக்கவும், இப்பகுதியில் நிலத்தடி நீர் உயரவும் போர்கால அடிப்படையில் குளத்திற்கு தண்ணீர் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.                                                 

நீங்க எப்படி பீல் பண்றீங்க