`டெங்கு பரவுது; கால்வாயைச் சுத்தப்படுத்துங்கள்' காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கை

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் டெங்குவால் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டெங்கு கொசு

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் பிரதாப் (37). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். 10 நாள்களுக்கும் மேலாக அவருக்குக் காய்ச்சல் இருந்த காரணத்தால் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு டெங்கு இருப்பது உறுதியானது. ரத்தத் தட்டுக்கள் குறைந்த காரணத்தால் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று இரவு வீடு திரும்பினார்.

``கடந்த சில வருடங்களாகவே டெங்குவின் பாதிப்பு தமிழகம் முழுவதும் அதிக அளவில் இருந்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் சுகாதாரப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி இருக்கிறது. டெங்கு அதிக அளவில் பரவுவதற்கு முன்பு தடுப்பு முறைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” எனப் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கத் தொடங்கிவிட்டார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!