அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்! | Police filed 300 pages charge sheet in ayanavaram rape case

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (12/09/2018)

கடைசி தொடர்பு:17:46 (12/09/2018)

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சிறுமி வழக்கு

சென்னை அயனாவரத்தில் உள்ள, அடுக்குமாடிக் குடியிருப்பில், மாற்றுத்திறனாளி சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், 17 பேரின் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் குற்றவாளிகள் அனைவரும் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டதால், சிறையில் அடைக்கபட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், அயனாவரம் மகளிர் காவல்நிலையம் சார்பில், சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.