லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை விசாரிக்கிறது ஆறுமுகசாமி ஆணையம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, மற்றும் சிங்கப்பூர் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளது.

ரிச்சர் பீலே

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மரணத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாணை ஆணையத்தை, அரசு அமைத்தது. இந்த ஆணையம், ஜெயலலிதாவுக்கு தொடர்புடையவர்கள், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரையும் விசாரித்து வருகிறது. இதுவரை, 100-க்கும் மேற்பட்டோரிடம், இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. அண்மையில், சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத, அப்போலோ மருத்துவர்களுக்கு, ஆணையம் கண்டனம் தெரிவித்தது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கான, பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த காலவரையறைக்குள், விசாரணை நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டியுள்ளதால், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது ஆணையம். அந்த வகையில், அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ், தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சம்மன் அனுப்பபடவுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!