அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.அழகிரி!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் கே.ஒச்சம்மாள் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆறுதல் தெரிவித்தார். 

அழகிரி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் ஒச்சம்மாள், உடல்நலக்குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் பல மாதங்களாகச் சிகிச்சை பெற்றுவந்தார். திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஆகஸ்ட் 30-ம் தேதி அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எனப் பலரும்  இரங்கல் தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜுவின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர் செல்லூர் ஜு அழகிரியைத் தொடர்ந்து புகழ்ந்துவரும் நிலையில் செல்லூர் ராஜு குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தற்போது நடைபெறும் அரசியல் சூழலில் அழகிரியும் செல்லூர் ராஜுவும் அரசியல் செயல்பாடுகள் குறித்து திட்டம் தீட்டிவருதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செல்லூர் ராஜுவின் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ``செல்லூர் ராஜுவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவே வந்தேன். நீங்கள் நினைப்பதுபோல ஒன்றும் இல்லை’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!