வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (13/09/2018)

கடைசி தொடர்பு:13:30 (13/09/2018)

``நாய் கடித்த எங்கள் மகளுக்கு உதவுங்கள்!" - கலங்கும் கோவை பெற்றோர்

கோவையில் நாய் கடியால், பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு அவரின் பெற்றோர் உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.

ரித்விகா

கோவை, சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலாஜி.  இவருக்கு, ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். ஜெயபாலாஜியின் மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது இல்லத்தில், இரண்டு நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. அவற்றில் ஒரு நாய்தான் ஜெயபாலாஜியின் 6 வயது மகள் ரித்விகாவை கடித்து குதறியுள்ளது. இதையடுத்து, ரித்விகா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது சிகிச்சைக்கு சுமார் 4 லட்ச ரூபாய் ஆகும் என்று மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். இதனால், ரித்விகாவின் பெற்றோர் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து ஜெயபாலாஜியிடம் பேசியபோது, “நான் சமீபத்தில்தான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது பெங்களூரை மையமாகக் கொண்ட புதிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளேன். சம்பவம் நடந்த தினம் நான் பெங்களூரிலிருந்து கோவை வந்துகொண்டிருந்தேன். என் மனைவியும் பணிக்குச் சென்றிருந்தார். வீட்டில் என் குழந்தைகள் தனியாகத்தான் இருந்தனர்.

தனியார் மருத்துவமனை அறிக்கை

என் வீட்டில் இரண்டு நாய்கள் உள்ளன. அதில், ஒன்றுக்கு ஒரு வயது ஆகிறது. அது ரித்விகாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். ரித்விகா அருகே, வேறு யாரையும் விடாது. நான் ரயிலில் வந்துகொண்டிருக்கும்போதுதான், தகவல் கிடைத்தது. என்ன நடந்தது, எதற்காக ரித்விகாவை கடித்தது என்றெல்லாம் தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலைக்கு மருத்துவ சிகிச்சைக்கு அவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது. அதனால், மகளின் சிகிச்சைக்கு மட்டும் உதவி கிடைத்தால் இந்த நேரத்தில் ஆறுதலாக இருக்கும்” என்றார்.

ரித்விகாவின் தந்தை ஜெயபாலாஜி எண் 90470 81999. அவரது வங்கி விபரம்  SBI 20389273283 IFSC Code SBIN0012656