வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (13/09/2018)

கடைசி தொடர்பு:15:40 (13/09/2018)

`பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விநாயகர்' - பள்ளி மாணவர்களின் அசத்தல் விநாயகர் சதுர்த்தி விழா!

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகமெங்கும் உற்சாகமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த வகையில், சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா வித்தியாசமாகவும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் இருந்தது. 'பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வு' நிகழ்ச்சியாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி

பிளாஸ்டிக் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு மாணவர்களே 5,000 மட்கும் தன்மையுடைய பேப்பர் பைகளைத் தயாரித்து அதன் மூலம் மிகப்பெரிய 30 அடி X 30 அடி அறிவிப்புப் பலகையை வைத்து அனைவருக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர். விநாயகர் பூமிப் பந்தைக் காப்பது போலவும், அம்பு விட்டு பிளாஸ்டிக்கை அழிப்பது போலவும் மாணவர்களால் விழிப்பு உணர்வு பலகை உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விழிப்பு உணர்வு பலகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஆர்ட் டைரக்டர் அமரன் கலந்துகொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

வித்தியாசமாக விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி தனியார் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க