`பியூட்டி பார்லரில் புகுந்து பெண் மீது சரமாரி தாக்குதல்!' - பெரம்பலூர் தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கைது

கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை சரமாரியாகத் தாக்கிய தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தாக்குதல்

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் வசித்து வருபவர் சத்யா. இவர் தனது வீட்டின் மாடியில் மயூரி என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அதேபோல் வேப்பந்தட்டையில் வசித்துவருபவர் தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார். இவர்கள் இருவருக்கும் ஐந்து வருடங்களாகக் கொடுக்கல் வாங்கல் பழக்கம் இருந்துவந்துள்ளது. இந்த நிலையில், தனது பியூட்டி பார்லரை விரிவுபடுத்துவதற்காக சத்யா, செல்வகுமாரிடமிருந்து 25 லட்சம் ரூபாய் பணம் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணத்தை செல்வகுமார் திருப்பிக் கேட்டிருக்கிறார். பணத்தைக் கொடுக்க முடியாமல் இழுத்தடித்துள்ளார். 

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு செல்வகுமார், சத்யாவிடம் போனில் பேசியிருக்கிறார். அப்போது அவர், செல்வகுமாரின் குடும்பத்தை ஒருமையில் திட்டியதால் ஆத்திரமடைந்த செல்வகுமார் வெங்கடேசபுரத்தில் உள்ள பியூட்டி பார்லருக்குச் சென்று சத்யாவை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதில் காயமடைந்த சத்யா சிசிடிவி புட்டேஜ் ஆதாரங்களைக் கொண்டு பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் காவல்துறையினர் செல்வகுமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!