வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (13/09/2018)

கடைசி தொடர்பு:18:40 (13/09/2018)

டி.ஜி.பி பதவி உயர்வு பட்டியலில் ஜாபர் சேட்?

ஜாபர் சேட்

மனித உரிமை ஆணையம் மீட்டிங், தலைமைச் செயலகத்தில் மீட்டிங் என்று பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறார் டி.கே.ஆர். கடந்த 10-ம் தேதியன்று டி.ஜி.பி ஆபீஸில் முக்கியமான ஒரு மீட்டிங் நடந்தது. உளவுத்துறை, நிர்வாகப்பிரிவு அதிகாரிகளுடன் டி.ஜி.பி மீட்டிங் நடத்தினார். டி.ஜி.பி பதவிக்குக் கூடுதல் டி.ஜி.பி பதவியில் உள்ள சீனியர்கள் ஆறு பேர்களில் ஒருவரை அரசாங்கம் சிபாரிசு செய்யலாம். `அது யார்?’ என்று முடிவு செய்ய பதவி உயர்வு கமிட்டி மீட்டிங் கடந்த 10-ம் தேதியன்று நடந்தது.

இதற்கு முன்பு, ஒரு மாதம் முன்புகூட இதே மாதிரி ஒரு கூட்டம் நடந்ததாம். சீனியாரிட்டி லிஸ்டில் நம்பர் ஒன் பெயர் யார் தெரியுமா? ஜாபர் சேட். இவரைத் தொடர்ந்து ஐந்து பேர்கள் இருக்கிறார்கள். முதல் கூட்டத்தில், ஜாபர் பெயரை தவிர்த்திருக்கிறார்கள். ஆனால், இரண்டாவது கூட்டத்தில் ஜாபர் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காக, சட்டத்துறையிடம் ஆலோசனை கேட்டுளனர். மொத்தம் ஆறு பேர்களைக் கொண்ட புதிய டி.ஜி.பி பதவி உயர்வு பட்டியலை, மத்திய தேர்வாணையத்துக்கு அனுப்பியுள்ளனர். அங்கிருந்து ஐவரில் ஒருவர் பெயர் ஒ.கே ஆகுமாம். ஜாபருக்கு கிடைக்குமா, கிடைக்காதா?... என்பது சில நாள்களில் தெரியவரும்.