காதலை நிரூபிக்க விபரீத முடிவு எடுத்த பி.இ மாணவி!

மேலூர் திருவாதவூர் பகுதியில் காதல் பிரச்னை காரணமாகப் பேரீச்சம்பழத்தில் விஷமருந்து கலந்து சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

உயிரிழந்த மாணவி

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த திருவாதவூரைச் சேர்ந்தவர் சிந்துஜா. இவர் மதுரை அருகேயுள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வருகின்றார். இவருக்கும் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலை சேர்ந்த கல்லூரி மாணவரான ராம்குமாருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் பேசிவந்ததாகத் தெரியவருகிறது. இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் வீட்டுக்குத் தெரியவர பெற்றோர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

ஏழ்மை நிலையில் இருந்த சிந்துஜாவை மணமுடிக்க ராம்குமாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் தன் கையை அறுத்து ராம்குமாருக்கு சிந்துஜா அனுப்பியும் கண்டுகொள்ளாததால் விரக்தியில் பேரீச்சம் பழத்தினுள் எலி மருந்தைக் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்தோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிந்துஜாவை அனுமதித்திருந்த நிலையில், பரிதாபமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!