`எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசு பழிபோடுகிறது' - கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், மாநில அரசுகள் மீது மத்திய அரசு பழிபோடுகிறது எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விநாயகர் சதுார்த்தி விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, "சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.டி.வி.தினகரன் சட்டசபைக்கு வராமலேயே, பொத்தாம் பொதுவாக  ஊழல், லஞ்சம் எனப் பேசி வருகிறார். ஊழலைப் பற்றி அவரிடம் ஏதும் ஆதாரம் இருந்தால், அதை அவர் சட்டமன்றத்தில் பேசலாம். அப்படி சொல்லாமல், லஞ்சம், ஊழல் எனப் பேசி வருகிறார். 

தமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. ஜனநாயக ரீதியாக கருத்துகளைத் தெரிவிக்கவும், போராட்டங்கள் நடத்தவும் ஜனநாயக முறைப்படி இந்த அரசு அனுமதி கொடுத்துள்ளது. உரிமைகள் இருக்கப்போய்தான் கம்யூனிஸ்ட்டுகள் நெருக்கடி நிலை எனப் பேச முடிகிறது.

ஜி.எஸ்.டி-யைக் கொண்டு வந்தபோது எந்த மாநில அரசைக் கலந்து ஆலோசிக்கவில்லை, எந்தப் பொருளையும் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிர்ப்பைச் சாமளிக்க முடியாமல் மாநில அரசுகள் மீது பழி போடுகின்றனர்" எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!