``7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார்” - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்! | ponradha krishnan meet edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 01:36 (14/09/2018)

கடைசி தொடர்பு:01:36 (14/09/2018)

``7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார்” - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

பொன் ராதாகிருஷ்ணன்

சென்னை கிரீன்வேஸ் சாலையில், உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்க உள்ள, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மட்டுமின்றி, அதோடு சேர்ந்து மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசுடன் இணைந்து, குமரியில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினேன். முதலமைச்சர் பழனிசாமிக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” என்றார்.  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிப்பது குறித்த தமிழக அரசின் பரிந்துரையை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ``மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்துகளைக் கேட்கும் வகையில்தான், அவர் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக நல்ல முடிவை ஆளுநர் விரைவில் அறிவிப்பார்” என்றார்.