அ.தி.மு.கவுக்கு புதிய நிர்வாகிகள் - அமைப்புச் செயலாளர்களாக மோகன், முருகையா பாண்டியன் நியமனம்

அ.தி.மு.கவில் புதிதாக அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ளனர். 

அ.தி.மு.க அலுவலகம்

அ.தி.மு.கவில் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதன்படி, அமைப்புச் செயலாளர்களாக, முன்னாள் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ முருகையா பாண்டியன், என்.சின்னத்துரை, செஞ்சி ந.ராமச்சந்திரன், எம்.பரஞ்சோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, பு.தா.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பிரிவுத் தலைவராக டி.ஆர்.அன்பழகன், விவசாயப் பிரிவு செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, விவசாய பிரிவு இணைச் செயலாளராக செ.தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக அணித் தலைவராக எம்.எல்.ஏ கே.அர்ச்சுனன், வர்த்தக அணிச் செயலாளராக கே.ரவிச்சந்திரன், கலைப் பிரிவுத் தலைவராக லியாகத் அலிகான், கலைப் பிரவு செயலாளராக ஆர்.வி.உதயகுமார், கலைப் பிரிவு இணைச் செயலாளராக பி.சி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தித் தொடர்பாளர்களாக, நிர்மலா பெரியசாமியும், லியாகத் அலிகானும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்சியின் சார்பு அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!