நெற்றியில் விபூதி... கையில் கொள்ளிச்சட்டி... சுடுகாட்டுப் பாதைக்காகப் போராடிய மார்க்சிஸ்ட் | marxist communist protest for cemetery path

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (14/09/2018)

கடைசி தொடர்பு:17:45 (14/09/2018)

நெற்றியில் விபூதி... கையில் கொள்ளிச்சட்டி... சுடுகாட்டுப் பாதைக்காகப் போராடிய மார்க்சிஸ்ட்

திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையில் சுடுகாட்டுக்குச் செல்ல வேறு பாதை அமைத்துத் தர வலியுறுத்தியும் அதோடு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொள்ளிச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட்

திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை கிராமத்தில் மயானத்துக்குச் செல்வதற்கு ஏற்கெனவே இருந்த பாதையில் குடியிருப்புகள் அதிகளவில் உருவாகிவிட்டதால் பாதை குறுகி விட்டது. அதற்குப் பதிலாக மாற்றுப்பாதை ஒதுக்கித் தர வேண்டும் எனவும், 100 நாள் வேலை திட்டத்தை அனைவருக்கும் உடனடியாக  வழங்க வேண்டும் எனவும்,  திருக்கண்ணமங்கை அம்மையப்பன் இடையே வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், வாலிபர் சங்கத்தினர் 5 பேர் கொள்ளிச்சட்டி ஏந்தியும் மற்றவர்கள் கோஷமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.