வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (14/09/2018)

கடைசி தொடர்பு:22:00 (14/09/2018)

`திட்டமிட்டே தொடர்ந்து ஊழல் செய்கிறார்கள்' - பா.ஜ.க-வை விளாசிய முன்னாள் எம்.பி!

``பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உலக அளவிலான கச்சா எண்ணெய் விலை ஏற்றம்தான் காரணம் என மோடி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பா.ஜ.க-வினர் ஊழலைத் திட்டமிட்டே தொடர்ந்து செய்து வருகின்றனர்” என தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

``பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உலக அளவிலான கச்சா எண்ணெய் விலை ஏற்றம்தான் காரணம் என மோடி கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. பா.ஜ.க-வினர் ஊழலைத் திட்டமிட்டே தொடர்ந்து செய்து வருகின்றனர்” எனத் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

தனுஷ்கோடி

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தைத் தற்போதைய பா.ஜ.க அரசு ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. இதில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே போல, ரபேல் விமானங்களைப் பராமரிக்கும் பணியை பொதுத்துறை நிறுவனமான, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் வழங்காமல், விமான துறையில் அனுபவமில்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. இதிலும் பல கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

பா.ஜ.க-வின் இந்த ஒப்பந்தத்தைக் கண்டித்து காங்கிரஸார் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரபேல் போர் விமானம் வாங்குவதில் நடந்த மிகப்பெரிய ஊழலைக் கண்டித்துதான் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.526 கோடிக்கு வாங்கிய ஒரு ரபேல் போர் விமானத்தை, தற்போது மூன்று மடங்கு விலை அதிகமாக ரூ.1,680 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய போதுகூட பிரதமர் மோடியோ, பாதுகாப்புத்துறை அமைச்சரோ சரியான பதிலளிக்காமல், அலட்சியப்படுத்திக்கொண்டிருந்தனர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த விமானத்தைப் பராமரிக்கின்ற பொறுப்பையும் பெங்களூரைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோனேட்டிகல் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோடி அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்துவிட்டார். அதிலும், பல கோடி ரூபாய் லஞ்சமாகப் பெற்றுள்ளார்கள். அந்தப் பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும்.

9,000 கோடி அளவுக்கு வங்கியில் மோசடி செய்துவிட்டு விஜய் மல்லையா லண்டன் சென்றுவிட்டார். இரண்டு நாள்களுக்கு முன்பு நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் சந்தித்துப் பேசியுள்ளார் என்றால், பா.ஜ.க-வினர் ஊழல்களைத் திட்டமிட்டே செய்து வருகிறார்கள் என்றுதான் அர்த்தம். ரூ.16,000 கோடி நிரவ் மோடியின் ஊழல் ஏற்றுக்கொள்ளவே முடியாதது. இந்தியர்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த விஜய் மல்லையா, நிரவ்மோடி போன்ற பண முதலைகளுடன் உறவு வைத்துள்ளார் மோடி.

பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் 100 ரூபாயைத் தொடும். இப்படி இந்த ஆட்சி தொடர்ந்து மக்கள் விரோத போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதற்கு விரைவில் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க