அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக விஜயபாஸ்கர் - அடுத்தடுத்த ரெய்டுகளிலும் அசராத எடப்பாடி!

அ.தி.மு.க உயர்மட்ட குழுக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2 வது நாளாக நடைபெற்றது.

விஜயபாஸ்கர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், நேற்று அக்கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 2 வது நாளாக இன்றும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாகவும் மூத்த நிர்வாகிகளுடன் உயர்மட்ட குழுவில் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் நேற்றைய ஆலோசனைக்குப் பிறகு, கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே போல, இன்றைய ஆலோசனைக்குப் பிறகும், புதிய நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக, தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குட்கா ஊழல் போன்று தொடர்ந்து பல்வேறு ரெய்டுகளிலும் விஜயபாஸ்கர் சிக்கியும் அவருக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவளித்து வருகிறார். அதன் ஒருபகுதியாகக் கட்சியின் சார்பில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே  அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 19-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!