வெளியிடப்பட்ட நேரம்: 02:20 (15/09/2018)

கடைசி தொடர்பு:10:02 (15/09/2018)

'நாட்டு மாடுகளைக் காப்போம்'- கண்காட்சி நடத்திய சேலம் பா.ஜ.க.

தமிழ்நாடு பாரம்பர்ய நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சேலம் கலைக் கல்லூரி அருகே உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில், மாநில மாநாடு நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த மாநாட்டில், மக்கள் பார்வைக்காக நாட்டு மாடு காளைகளையும், பசுக்களையும் கொண்டுவந்திருந்தார்கள்.

இதுபற்றி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபிநாத், ''தமிழ்நாட்டில் பாரம்பர்யமாக இருந்த நாட்டு மாடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. மீதி இருக்கும் நாட்டு மாடுகளைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும். நாட்டு மாடுகளின்மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. சூரியக் கதிர்களில் உள்ள காஸ்மிக் கதிர்களை நாட்டு மாடுகளின் திமில்கள் வழியாக உட்கொண்டு, அதைப் பாலின் வழியாக தங்கபஷ்பமாகத் தருகிறது. இதனால், நாட்டு மாட்டின் பால் 108 வியாதிகளைப் போக்கும் குணமுடையது.

நாட்டு மாட்டின் சாணத்தில் 33 கோடி நுண்ணுயிரிகள் இருப்பதால், இது சிறந்த உரமாகப் பயன்படுகிறது. 15 ஏக்கர் வைத்திருப்பவர் ஒரு நாட்டு மாடு வைத்திருந்தால் போதுமானது. காடுகள் செழிப்படையும், விவசாய உற்பத்தி பெருகும்.  நாட்டு மாட்டின் கோமியத்தில் இருந்து அர்க் தயாரிக்கப்படுகிறது. இது, சர்வ நோய் நிவாரணியாகப் பயன்படுகிறது.

அதனால், நாட்டு மாட்டின் நன்மையைக் கருத்தில்கொண்டு, அவற்றை அழிவிலிருந்து மீட்டுப் பாதுகாக்க வேண்டும். விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே இன்று மாநாடு நடத்தியிருக்கிறோம். இதை மக்கள் நேரடியாகத் தெரிந்து உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, நாட்டு மாடு பசுக்களையும், காளைகளையும் அழைத்துவந்து மக்களுக்குக் காட்டியிருக்கிறோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க