வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (15/09/2018)

கடைசி தொடர்பு:16:35 (15/09/2018)

எங்க சாம்ராஜ்ஜியத்தை அசைக்கக்கூட முடியாது' - அரசு தலைமைக் கொறடா ஆவேசம்

`அ.தி.மு.க என்ற சாம்ராஜ்ஜியத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துக்கூடபார்க்கமுடியாது வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.கவே வெற்றி பெறும். அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என அண்ணாவின் பிறந்த நாளில் சபதமேற்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் பேசியிருக்கிறார்.

ராஜேந்திரன்

தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும் அரசு தலைமைக் கொறடாவுமான ராஜேந்திரன் தலைமையில் ஒற்றுமைத் திடலில் திரண்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முக்கிய வீதிகளின் வழியாக பேருந்து நிலையம் நோக்கிச் சென்றனர். இதையடுத்து பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசிய அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், ``வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.கவே வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். இதற்கு அண்ணாவின் பிறந்தநாளில் ஒவ்வொருவரும் சபதமேற்க வேண்டும். அ.தி.மு.க என்ற சாம்ராஜ்ஜியத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துக்கூடபார்க்கமுடியாது. மிக வலுவான கட்சியாக அ.தி.முகவை மாற்றிக்கொண்டிருக்கிறார் அண்ணன் எடப்பாடியார்'' எனப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.