`காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் விஜயபாஸ்கருக்கு பதவி' - துரைமுருகன்!

துரைமுருகன்

'அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதவி கொடுக்கவில்லை என்றால் யாரையாவது காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தினாலேயே அவருக்கு அ.தி.மு.கவில் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கலாம் என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கோவையில் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த அ.தி.மு.க கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. குட்கா ரெய்டு வழக்கில் சிக்கிய அவருக்குப் பதவி வழங்கப்பட்டது விமர்சனத்தை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க பொருளாளர் துரைமுருகன், "மின் தடையே இருக்காது என  ஒரு அமைச்சர் சொல்கின்றார், மற்றொரு அமைச்சர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புகிறார். முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து  நாட்டின் மின்சார நிலைமையை கலந்தாலோசித்த பின்பு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி கொடுக்கவில்லை என்றால் யாரையாவது காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தால் அவருக்கு கட்சியில்  அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கலாம். இலங்கையில் நடந்த இறுதிப்போரில் இந்தியா உதவியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பேட்டி அளித்து இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!