வெளியிடப்பட்ட நேரம்: 23:19 (15/09/2018)

கடைசி தொடர்பு:23:19 (15/09/2018)

திருச்சியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்..!

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழாவைத் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
 
அந்த வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலையில் இருந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
இன்று காலை 8.30மணி அளவில் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திரண்டு வந்த தி.மு.கவினர் மரியாதை செலுத்தினர். இதேபோல் தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, தீபா பேரவை, வி.சி.க உள்ளிட்ட கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
 
அதிமுக சார்பில் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகம் உள்ள சிம்ரன் சுப்பிரமணியபுரத்தில் இருந்து 1200க்கும் மேற்பட்டோர் பைக்கில் பேரணியாக வந்த அதிமுகவினர் திருச்சி எம்பியும் மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், தங்கியிருந்த சங்கம் ஹோட்டலிலிருந்து மாவட்டச் செயலாளர் சீனிவாசன், மாநில அமைப்புச் செயலாளர் மனோகரன், சாருபாலா தொண்டைமான் ஆகியோர் தலைமையில் இரண்டாயிரத்து அதிகமான அக்கட்சியின் தொண்டர்கள் திரண்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். தேவராட்டம், ஒயிலாட்டம் என வழிநெடுக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
 
திறந்த வேனில் வந்த தினகரன், அண்ணா சிலை அருகே கட்சிக் கொடியை ஏற்றியவர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.  இதனால் சத்திரம் பேருந்து நிலையம் மட்டுமல்லாமல் திருச்சியின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் இடத்தில் இன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தினகரன் கலந்து கொள்வதால், திருச்சி முதல் கோட்டை வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை ஆங்காங்கே தினகரனை வரவேற்று வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் போட்டியாக அமைச்சர் விஜயபாஸ்கர்  தரப்பினரும் பேனர்கள் வைத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க