மீத்தேன் எடுக்கும் பணி தொடக்கமா? கொந்தளித்த கும்பகோணம் மக்கள்

கும்பகோணம் அருகே பள்ளிக்காக ஒதுக்கிய இடத்தில் ராட்சஸ இயந்திரங்களை கொண்டு ஆழ்துளையிட்டு குழாய்கள் அமைக்கபட்டதோடு பூமிக்கடியில் இருந்து எடுக்கபட்ட மண் ஐந்து அடிக்கு ஒரு முறை ஆய்வு செய்யபட்டது. மீத்தேன் எடுப்பதற்காகத்தான் இந்த பணிகள் நடைபெறுகிறது என கூறி அப்பகுதி மக்கள் திரண்டதால் அதிகாரிகள் பதில் எதுவும் கூறாமல் ஓடிவிட்டனர். இது போன்ற பணிகள் எங்க பகுதியில் நடைபெறக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்ததோடு பூமிக்கடியில் இறக்கபட்ட குழாய்களையும் வெளியே எடுக்க வைத்தனர் இதனால் பரபரப்பு எற்பட்டது

கும்பகோணம் அருகே பள்ளிக்காக ஒதுக்கிய இடத்தில் ராட்சஸ இயந்திரங்களைக் கொண்டு ஆழ்துளையிட்டு குழாய்கள் அமைக்கபட்டதோடு பூமிக்கடியில் இருந்து எடுக்கபட்ட மண் ஐந்து அடிக்கு ஒரு முறை ஆய்வு செய்யபட்டது. மீத்தேன் எடுப்பதற்காகத்தான் இந்தப் பணிகள் நடைபெறுகிறது என கூறி அப்பகுதி மக்கள் திரண்டதால் அதிகாரிகள் பதில் எதுவும் கூறாமல் ஓடிவிட்டனர். இது போன்ற பணிகள் எங்க பகுதியில் நடைபெறக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்ததோடு பூமிக்கடியில் இறக்கபட்ட குழாய்களையும் வெளியே எடுக்க வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு எற்பட்டது. 

கும்பகோணம் அருகே உள்ள துக்காச்சி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கு சொந்தமான தரிசு நிலத்தில் கடந்த சில தினங்களாக ராட்சஸ இயந்திரங்களைக் கொண்டு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை அப்பகுதி மக்கள் பள்ளியின் குடிநீர்  உபயோகத்திற்கு போர்வெல்  அமைப்பதாக நினைத்து கொண்டனர். இந்நிலையில் போர்வெல் அமைக்கும் இடத்தில் இன்று 10 இஞ்ச் அளவு கொண்ட ராட்சஸ இரும்பு குழாய்கள் அதிகளவில்  இறக்கபட்டதால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே கிராம மக்கள் அனைவரும் அங்கு சென்று பார்வையிட்டனர். அங்கு அதிகாரிகள் மண் ஆய்வில் ஈடுபட்டதோடு  5 அடிக்கு ஒரு முறை மண்ணை எடுத்து ஆய்வு செய்து வந்ததும் தெரியவந்தது. ஆய்வில் ஈடுபட்டவர்களிடம் பொதுமக்கள் திரண்டு மண் ஆய்வு எதற்காக எனக் கேட்டனர் அதற்கு சரியான பதில் கூறாததால் பூமிக்கடியில் இறக்கபட்ட குழாய்களை வெளியேற்ற வேண்டும் என கூறி  கோஷமிட்டனர்.

இதனால் அங்கிருந்த அதிகாரிகள் பதில் எதுவும்  கூறாமல்  ஜீப்பில் ஏறி புறப்பட்டு சென்றனர். மேலும் தொடர்ந்து பொதுமக்கள் வற்புறுத்தியதால் மண்ணில் இறக்கப்பட்ட குழாய்கள் உடனடியாக வெளியே எடுக்கப்பட்டது. இதனையடுத்து, மண் ஆய்வு மற்றும் ஆழ் குழாய் இறக்கும் பணி இங்கு நடைபெறக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் பணியும்  நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வேறு எந்த அதிகாரிகளும் அங்கு வரவில்லை. ஆனால் பொதுமக்கள் அங்கேயே  நீண்ட நேரம் காத்திருந்ததோடு மீண்டும் இந்தப் பணியை இங்கு தொடங்கினால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து துக்காச்சியைச் சேர்ந்த சரவணன் கூறியதாவது, கடந்த சில நாட்களாக பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஊருக்கு பொதுவான தரிசு நிலத்தில் ஆழ்குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. நாங்கள் பள்ளிக்கு தான் குடிநீர் குழாய் அமைக்கிறார்கள் என  நினைத்தோம். ஆனால்  தற்போது பெரிய அளவில் குழாய்கள் வந்து இறங்கியதோடு அதை பூமிக்கு அடியில் இறக்கவும் செய்ததால்  எங்களுக்கு சந்தேகம் வந்தது. நாங்கள் அங்கிருந்தவர்களிடம் எதற்காக இந்தக் குழாய் இறக்குகிறீர்கள் என கேட்டதற்கு அவர்கள் முறையான பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் 5 அடிக்கு ஒரு முறை பூமியிலிருந்து வரும் மண்ணை பிரித்து தனி தனியாக வைத்திருந்தனர். இதனால் இங்கு பூமிக்கடியில் மீத்தேன், ஷேல்கேஸ் எடுப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவவது தெரிய வந்தது. இந்தப் பணியை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து தடுத்து நிறுத்தினோம் என்றார்.

மேலும் சிலர், டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் கடந்த மாதம் மத்திய அரசு டெல்டா பகுதியில் மீத்தேன் எடுபதற்கான அனுமதி டெண்டரை இரண்டு நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது. இங்கு மண் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் மக்கள் திரண்டதால் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர். அதன் பிறகு யார் எந்த துறையை சேர்ந்தவர்கள் இந்தப் பணியை செய்தார்கள் என எந்த விளக்கமும் யார் தரப்பில் இருந்தும் கொடுக்கபடவில்லை. இதனை மீத்தேன் எடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணியகவே பார்க்கிறோம். இனி இது போல் எந்த பணியும் எங்கப் பகுதியில் நடைபெறக்கூடாது'  என ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!