அரசுப் பள்ளியின் தரமில்லாத சுற்றுச்சுவர் - மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

சிவகங்கை அருகே பள்ளி சுற்றுச்சுவர் தரமற்ற நிலையில் கட்டப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் ஒருவிதமான பயத்துடன் பள்ளிக்கு செல்லுவதாகவும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து சிவகங்கை தி.மு.க நகரச் செயலாளர் துரை.ஆனந்த் பேசும் போது, 'சிவகங்கை அருகே கொட்டகுடி கீழ்ப்பாத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வேம்பங்குடி. இங்குள்ள ஊராட்சி ஓன்றிய ஆரம்பப்பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை அ.தி.மு.க காண்ட்ராக்டர் தர்மராஜ் என்பவர் எடுத்துள்ளார். தரமற்ற நிலையில் ஒப்பந்தகாரர் உப்பாற்றில் உப்பு மண் அள்ளியும் தரமில்லாத சிமெண்ட் உள்ளிட்ட மூலப்பொருள்கள் கொண்டு கட்டி வருகிறார்.

.இதில் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்து விட்டது. இந்தப் பள்ளியில் படிக்க வருகிறவர்கள் எல்லாம் சிறுகுழந்தைகள். இந்த குழந்தைகளின் உயிருக்கு முதலில் பாதுகாப்பு வேண்டும். இது சம்மந்தமாக ஒப்பந்ததாரரிடம் கிராம மக்கள் சென்று கேட்டதற்கு தரமில்லாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியிருக்கிறார். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகிறார்கள். மேலும் மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தரமான சுற்றுச்சுவர் கட்டி தரவேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து நாங்கள் அடுத்த கட்ட போரட்ட முடிவுக்கு வரஇருக்கிறோம்” என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!