சென்னையில் இன்று கரைக்கப்படுகிறது விநாயகர் சிலைகள் - பாதுகாப்பு பணியில் பத்தாயிரம் போலீஸார்

விநாயகர் சதுர்த்தி அன்று வழிபட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்படுவதால் பெரும்பாலான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

விநாயகர்

விநாயகர் சதுர்த்தி கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று விநாயகர் சிலைகள் கரைக்கும் விழா நடைபெறுகிறது. சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை,திருவெற்றியூர், எண்ணூர்,காசிமேடு ஆகிய 5 இடங்களில் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் இருக்கும் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டுக் கரைக்கும் பணிகள் தொடங்கிவிட்டது. இந்த ஊர்வலத்தின் போது எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க சென்னையில் மட்டும் பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று விடுமுறை நாள் என்பதால் 90 சதவிகித சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சிலைகளைக் கரைக்க வசதியாக அனைத்துக் கடற்கரைகளிலும் ராட்சத கிரேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும் சிலை கரைக்கும் பணிகளில் நூற்றுக்கணக்கான நீச்சல் தெரிந்த வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். சிலைகள் கரைக்க ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து கடற்கரைகளிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!