அணைக்கட்டு காவல்நிலையம் அருகே கடத்தப்பட்ட சிறுமி - கண்ணீரில் தவிக்கும் நாடோடி பெற்றோர்!

காவல் உதவி ஆய்வாளர் வீட்டுக்கு வெளியே படுத்துக்கொண்டிருந்த தன் இரண்டு வயது பெண் குழந்தை கடத்தப்பட்டதாக நாடோடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குழந்தை கடத்தல், நாடோடி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள மானமதி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காளியம்மாள் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதுடைய ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் மூன்று சக்கர வாகனத்தின் மூலம் ஊர்ஊராக சென்று பொம்மைகள், வளையல்கள் உள்ளிட்ட ஃபேன்சி பொருள்களை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். நேற்று பவுஞ்சூர் வந்தபோது இரவு அந்த வாகனத்தின் முன்விளக்கு பழுது அடைந்துவிட்டது. இதனால் அருகில் உள்ள அணைக்கட்டு காவல்நிலையம் அருகே, உதவிக் காவல் ஆய்வாளர் ஒருவரின் வீட்டின் முன்பு படுத்து உறங்கி இருக்கிறார்கள். இரவு 11 மணிக்குக் கொசு வலை விரித்து ஹரினியை தூங்க வைத்திருக்கிறார்கள். சில நிமிடங்கள் கழித்துப் பார்க்கும்போது ஹரிணி காணாமல் போனது தெரியவந்தது. உடனே அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். உங்கள் உறவினர்கள் யாராவது அழைத்துக்கொண்டு போய் இருப்பார்கள் என காவல்நிலையத்தில் பதில் வர ஹரிணியின் பெற்றோர்கள் பதறிப்போனார்கள். ஆனாலும் ஹரிணி கிடைக்கவே இல்லை. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஹரிணியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!