``எதிரிகளைப் பழிவாங்க மாநில அரசைப் பயன்படுத்துகிறார்கள்” மத்திய அரசை விளாசிய வசந்தகுமார்

தி.மு.க.வில் அழகிரியைச் சேர்க்காத ஸ்டாலினின் நிலைப்பாடு சரியானதுதான் எனத் தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

வசந்தகுமார்

தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``திட்டம் போட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். ஆகவே பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது. மத்திய அரசு எதிரிகளைப் பழிவாங்க மாநில அரசைப் பயன்படுத்துகிறது. மத்திய அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லை, மக்களை ஏமாற்றுகிறது. தி.மு.க.வில் அழகிரியைச் சேர்க்காத ஸ்டாலினின் நிலைப்பாடு சரியானதுதான். கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டகம் துறைமுகத் திட்டம் வர வாய்ப்பு இல்லை. கல்வித் திட்டத்தில் மாணவர்களின் அச்சத்தைப் போக்கிய அமைச்சர் செங்கோட்டையனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குமரி இளைஞர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை வரும் 30-ம் தேதி நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் வைத்து நடத்துகிறோம். இந்த முகாமில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!