நீலகிரியில் இரண்டாவது சீஸன்! - சாகச சுற்றுலாவை எதிர்பார்க்கும் வெளிமாநிலப் பயணிகள் | Outdoor tourists looking forward to adventure tours

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (19/09/2018)

கடைசி தொடர்பு:17:30 (19/09/2018)

நீலகிரியில் இரண்டாவது சீஸன்! - சாகச சுற்றுலாவை எதிர்பார்க்கும் வெளிமாநிலப் பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீஸன் தொடங்கியுள்ள நிலையில் புதிதாகப் பொழுது போக்குப் பூங்கா மற்றும் சாகச சுற்றுலா வசதிகளை கர்நாடக, கேரள சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் காேத்தகிரி நேரு பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, ஊட்டி ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா எனப் பிரபலமான பாெழுது போக்குப் பூங்காக்கள் மட்டும் அல்லாது குன்னுார் லாம்ஸ் ராக், டால்பின் நோஸ், கோத்தகிரி கேத்ரின் பால்ஸ், தாெட்டபெட்டா வியூபாயின்ட், ஊட்டி பாேட் ஹவுஸ், சூட்டிங் பாயின்ட் உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களும் உள்ளன.

ஆண்டுதாேறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் முதல் வாரம் வரை, முதல் சீஸனும், செப்டம்பர் மாதம் முதல், நவம்பர் முதல் வாரம் வரை, இரண்டாவது சீஸனுக்கு நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமாேதும். சீஸன் சமயங்களில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்குப் படை எடுக்கின்றனர். 

இதில் கேரளா மற்றும் கர்நாடக சுற்றுலாப் பயணிகள் வருகை பிற சுற்றுலாப் பயணிகளைவிட அதிகம். குறிப்பாக, கர்நாடகா, கேரள சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறைக்குக்கூட மலைகளின் ராணியான நீலகிரி மலையை ரசிப்பதற்காகச் செலவிட தயங்குவதில்லை. நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது, சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் முதுமலை, தெப்பக்காடு, பந்திப்பூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ரசித்துவிட்டு, கூடலூர் வழியாக ஊட்டிக்குப் புறப்படுகின்றனர். 
 ஊட்டிக்கு வரும் வழியில் ஊசிமலைக் காட்சி முனையை ரசிப்பதற்கு முன்னதாக, ராேட்டின் இருபுறங்களிலும் அமைந்துள்ள கற்பூர மரச் சாேலைகளுக்கு நடுவே நின்று புகைப்படம் எடுப்பதற்குத் தவறுவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது. இந்நிலையில் கேரள, கர்நாடக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கற்பூர மரச்சோலை அமைந்துள்ள இடத்தில் புதிதாக ஒரு பொழுதுபோக்கு பூங்காவையும், ஊசிமலை காட்சி முனையில் ‛ரோப் கார்’ வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

நீலகிரி

 இது குறித்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‛‛கூடலூர் வழியாக ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஊசி மலைக் காட்சி முனைக்குச் செல்வதற்கு முன்னதாக ரோட்டின் இருபுறமும் அமைந்துள்ள கற்பூர மரச் சோலைகளுக்கு மத்தியில் நின்று புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கற்பூர மரச் சாேலைக்கு மத்தியில், பார்க்கிங் மற்றும் கழிப்பறை வசதியுடன்கூடிய ஒரு பாெழுது பாேக்கு பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே பாேல ஊசி மலைக் காட்சி முனையில் இருந்து அதற்கு எதிரில் உள்ள மலை வரை ‛ராேப் கார்’ அமைக்கப்பட்டால், நீலகிரி மாவட்டத்தில் இது பாேன்ற ஒரு சிறப்பான சுற்றுலாவாக எதுவும் அமைந்திட முடியாது. இப்படிச் செய்தால் கூடலூர் வழியாக ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ஊட்டிக்குச் செல்லாமல் ஒரு நாள் முழுவதையும் கூடலூரில் கழித்துவிட்டுச் செல்ல நேரிடும், இதனால் கூடலூரில் உள்ள வியாபாரிகள்,  மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள். மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க