`7 வருஷமா தண்ணி இல்ல; நிலக்கரி துகள்கள சுவாசிக்கிறோம்’ - கலெக்டரிடம் குமுறிய பெண்கள் | People seiged in Cuddalore Collector Office

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (24/09/2018)

கடைசி தொடர்பு:16:38 (24/09/2018)

`7 வருஷமா தண்ணி இல்ல; நிலக்கரி துகள்கள சுவாசிக்கிறோம்’ - கலெக்டரிடம் குமுறிய பெண்கள்

நெய்வேலி தாண்டவன்குப்பம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா.
 

நெய்வேலி


கடலூர் மாவட்டம் நெய்வேலி தாண்டவன்குப்பம் பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த 7 வருடங்களாகக் குடி நீர், மின் வசதி, சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், என்.எல்.சி சுரங்கப்பகுதியிலிருந்து வெளியேறும் நிலக்கரி துகள்கள் காற்றில் பறந்து கிராமப் பகுதியில் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் மாவட்டக் கலெக்டர் அன்புச்செல்வனை நேரில் பார்த்து மனு கொடுத்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது... ‘நாங்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளாகக் குடி நீர், மின் வசதி. சாலை வசதி என அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். மேலும் என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்திலிருந்து காற்றில் வெளியேறும் நிலக்கரி துகள்கள் எங்கள் கிராமப் பகுதிகளில் படிந்து எங்களுக்குத் தொற்று நோய் உட்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்பத்தி வருகிறது. எங்களுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.