``பிரதமர் யார் என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார்” - நீலகிரியில் திருச்சி சிவா பேச்சு | Trichy Siva says stalin will decide next prime minister

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (24/09/2018)

கடைசி தொடர்பு:22:08 (24/09/2018)

``பிரதமர் யார் என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார்” - நீலகிரியில் திருச்சி சிவா பேச்சு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் நிகழ்ச்சி நடந்தது. புலவர் ராமலிங்கம், கவிஞர் நந்தலாலா மற்றும் தி.மு.க காெள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். இவர்கள் கருணாநிதியின் சிறப்புகளையும் சமயாேஜித பேச்சுத் திறன் குறித்தும் பேசினர்.

கூட்டம்

காெள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, ‛‛அண்ணாவைப் போன்ற அறிஞன் பிறக்க முடியாது, கலைஞரைப் போன்ற தலைவர் இருக்க முடியாது” என்று பேசியபோது தி.மு.க-வினர் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றனர். அதேபோல அவர் இறுதியாக, ``நிலவில்லா வானம் போல இருக்குதடா, நீ இல்லா வாழ்க்கை வெறுக்குதடா” என்று கூறியது கூட்ட அரங்கை சில நாெடி அமைதிக்குக் காெண்டு சென்றது. 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, திருச்சி சிவா செய்தியாளர்களிடம், ‛‛தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னால், ஸ்டாலின் பாெறுப்பேற்ற பின்னர் ஏராளமான இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்துள்ளனர். கருணாநிதி என்கிறவர் தனி திருச்சி சிவாமனிதர் அல்ல, சகாப்தம். அவர் இல்லாத சூழலில் பல இடங்களில் பல அசம்பாவிதங்கள் அரங்கேறியுள்ளன.  குறிப்பாக, பெரியார்  சிலையை அவமதிக்கும் துணிச்சல் சிலருக்கு வந்திருக்கு என்றாலும், தலைவரைப் போலவே, ஸ்டாலினும் வன்மையாகக் கண்டிக்கின்றார். தலைவரிடமிருந்து உறுதியையும் துணிச்சலையும் பெற்றிருக்கிறேன் என்று பொதுக்குழுவில் பேசியதற்கேற்ப அவரது அறிக்கைகள், உரைகள், பேட்டிகள் அமைந்துள்ளன. அண்மையில்கூட இந்த நாட்டில் ஆளுக்கு ஒரு சட்டம் என்பதை பாேல ஒரு சிலரை பொழுது விடிவதற்குள் வேட்டையாடி கைது செய்வதும், மிகப் பெரிய குற்றங்களைச் செய்துவிட்டு காவல்துறை பாதுகாப்போடு சுற்றி வருபவர்களைக் கைது செய்ய கையாளாகாத அரசாகத் தமிழக அரசு இருக்கின்றது எனத் துணிச்சலாகக் கண்டித்தார் ஸ்டாலின்.

பொதுக்குழுவில், மத்தியில் காவிமயமாக்க நினைக்கும் மோடியின் செயலை விமர்சித்தார். பன்முகத் தன்மைகாெண்ட இந்த நாட்டில் ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு மதம், ஒரு இனம், ஒரு கலாசாரம் எல்லாவற்றையும் ஒரு முகமாக மாற்ற நினைக்கும் மத்தியில் உள்ள ஆட்சியை அகற்ற வேண்டும், தமிழகத்தில் ஊழலில் திளைத்துக்காெண்டிருக்கும் ஆட்சியை அகற்றிட வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறார். தேர்தலுக்காக, தி.மு.க களப்பணி அருமையாக நடக்கிறது, விரைவில் நடக்கவுள்ள தேர்தலின்போது அதை நாடு உணரும். இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் ஸ்டாலின்தான் நிச்சயமாக முடிவெடுப்பார்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க