``மக்களின் மனநிலையை ஆய்வுக் குழுவினர் அறிந்துகொண்டனர்” - ஆட்சியர் தகவல் #sterlite | inspection committee came to know about peoples wish, says collector

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (24/09/2018)

கடைசி தொடர்பு:22:30 (24/09/2018)

``மக்களின் மனநிலையை ஆய்வுக் குழுவினர் அறிந்துகொண்டனர்” - ஆட்சியர் தகவல் #sterlite

``ஸ்டெர்லைட் ஆலை குறித்த மக்களின் மனநிலையை தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழுவினர் அறிந்துகொண்டனர்” என மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி தெரிவித்தார்.

ஆய்வுக் குழுவினர் வருகை தொடர்பாக ஆட்சியர் பேட்டி

துாத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழுவின் வருகையின்போது, அனைத்து தரப்பு மக்களும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். ஆலையின் ஆதரவு தரப்பு மக்களை மனு கொடுக்க போலீஸ் அனுமதிக்கவில்லை எனத் தவறான தகவல் கூறப்படுகிறது. மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே போலீஸார் கூடுதலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

ஆய்வுக்குழுவின் வருகையைப்  பொறுத்தவரையில் அனைத்து தரப்பு மக்களின் மனதில் உள்ளதை அவர்கள் அறிந்துகொண்டார்கள்.  ஆய்வு திருப்திகரமாக இருந்ததாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். ஆய்வுக்குழுவினர்  மக்களிடம் கருத்துக் கேட்பதற்காக மீண்டும் தூத்துக்குடிக்கு வருவார்களா, இல்லையா? என்பது குறித்து அவர்கள்தான் கூற வேண்டும். நான் அதுகுறித்து, கருத்து ஏதும் கூற முடியாது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து   காப்பர்  தாதுக்களை எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துவிட்டது.

இதை வாங்கும் நிறுவனங்களின் அனுமதி கிடைத்ததும், ஆலை நிர்வாகம் ஓரிரு வாரங்களில் அவற்றை வெளியேற்றும்.  மலேசிய மணல் விற்பனை ஆன்லைனில் தொடங்கியுள்ளது. மணல் தேவைப்படுகிறவர்கள், நேரடியாக ஆன்லைனில் பதிவுசெய்து மணலைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுப்பணி துறையினரின் ஆய்வுக்குப் பின்னர்தான் மணல்  விற்பனைக்கு வந்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாள்களில் விற்பனைக்காக மணல் வெளியேற்றப்படும்” எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை