வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (25/09/2018)

கடைசி தொடர்பு:17:31 (25/09/2018)

நடுவானில் விமானத்தின் கதவுகளைத் திறந்த அப்பாவி இளைஞர்..! காரணத்தைக் கேட்டா சிரிப்பீங்க 

விமானத்தில் முதன்முறை பயணம் செய்த ராஜஸ்தான் பயணியால் டெல்லி - பாட்னா `கோ ஏர்’ விமானத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அவர் என்ன செய்தார் என்பதைத் தொடர்ந்து படியுங்கள்...

விமானம்
 

கடந்த 22-ம் தேதி டெல்லியிலிருந்து பாட்னா நோக்கி கோ ஏர் (Go Air) விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென அவசரக் கால கதவை (Emergency exit door) திறக்க முயற்சி செய்தார். இதைக் கண்ட அங்கிருந்த மற்றொரு பயணி பயந்துபோய் விமானப் பணிப்பெண்களை அழைக்கும் பட்டனை அழுத்தினார். அந்த இடத்துக்கு வந்த பணிப்பெண்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். அவரைப் பேச விடாமல் அவரது இருக்கையில் அமர வைத்துவிட்டுச் சென்றனர். விமானம் தரையிறங்கியதும் அந்த நபரைப் பிடித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் அந்த விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். ‘இந்த நபர் திடீரென எமர்ஜென்ஸி கதவைத் திறக்க முயற்சி செய்தார். நாங்கள் பதறிவிட்டோம். அவரைத் தடுக்க முற்பட்டோம். அவர் அதற்குள் கதவுகளை அன்லாக் செய்துவிட்டார். ஆனால் கேபின் ப்ரெஷர் (Cabin pressure) காரணமாகக் கதவுகள் திறக்கவில்லை. அதற்குள் அதை மீண்டும் லாக் செய்துவிட்டோம்’ என்றனர்.

அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஜஸ்தானைச் சேர்ந்த அவர் அஜ்மரில் ஒரு பிரபல தனியார் வங்கியில் வேலை செய்கிறாராம். 20 வயது மட்டுமே நிரம்பிய அவர் விமானத்தில் முதன்முறையாகப் பயணம் செய்கிறாராம். கழிவறை கதவு என்று நினைத்துக்கொண்டு விமானத்தின் அவசரக்கால கதவுகளைத் திறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவரின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்த அதிகாரிகள் மனம் நெகிழ்ந்து அவரிடம் இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள் என்று கூறி விடுவித்துள்ளனர். மேலும் பணிப் பெண்களிடம் இது போன்ற சமயங்களில் பயணிகளின் விளக்கத்தைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க