தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..! | DMK chief M.K.Stalin admitted in Apollo hospital

வெளியிடப்பட்ட நேரம்: 00:36 (27/09/2018)

கடைசி தொடர்பு:00:36 (27/09/2018)

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், கடந்த ஒருவருட காலமாக தொடர் பிரச்சாரங்கள் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போலோ

சிறுநீரகத் தொற்றுக்கான வழக்கமான பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து உடனடியாக வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம், ஜூலை மாதம் இடது கண்ணில் ஏற்பட்ட கண்புரை பாதிப்பின் காரணமாக கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.