வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (28/09/2018)

கடைசி தொடர்பு:17:55 (28/09/2018)

இந்தியாவுக்கு 2 வது இடம்! - சர்வதேசப் போட்டியில் சாதித்த அஜித் அணி #UAVMedicalExpress2018 #Daksha

நடிகர் அஜித் நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி வாகனங்களை இயக்குதல் போன்றவற்றில் கைதேர்ந்தவர். `விவேகம்’ படப்படிப்பின்போது அஜித் ஆளில்லா விமானத்தை ரிமோட் மூலம் இயக்கும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆளில்லா விமானங்கள் இயக்குவதிலும் அவர் வல்லுநர் என்பதை நிரூபித்துள்ளார்.

அஜித்
 

இயற்கை பேரிடர் சமயங்களில் மக்களை மீட்க உதவியாக இருப்பவைதான் சிறிய அளவிலான ஆளில்லா விமானங்கள் (Unmanned Aerial Vehicles). மீட்புப் பணிகள் மட்டுமன்றி ஆராய்ச்சி பணிகளுக்கும் இந்தக் குட்டி விமானங்கள் பயன்படுகின்றன. ஆளில்லா விமானங்கள் உதவியுடன் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியும் என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களும் இந்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன.  

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் ஆராய்ச்சி சார்ந்த போட்டிகளில் பங்குபெற்று வருகின்றனர். தக்‌ஷா குழு இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் SAE ISS ஏரோ டிசைன் சேலஞ்சில் அசாத்திய திறனை வெளிப்படுத்தினர். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்டில் நடக்கும் யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் 2018-ல் பங்கேற்க தங்களைத் தயார் செய்துகொண்டனர். அதுமட்டுமன்றி தக்‌ஷா குழுவின் ஆலோசகராகத் திரைப்பட நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டார்.

அஜித் டீம்
 

ஏற்கெனவே ரிமோட் மூலம் வாகனங்களை இயக்குவதில் வல்லவரான அஜித்திடம் இப்படியொரு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அனைவரும் வரவேற்றனர். அஜித் தனக்கு கொடுத்த பொறுப்பை கச்சிதமாகச் செய்து முடித்துள்ளார். ஆம், அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு அந்த சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்துள்ளது. 

 

அஜித் டீம்

ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தக்‌ஷா அணி உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த 11 குழுக்கள் தேர்வாகின. 

அஜித் மேற்பார்வையில் தக்‌ஷா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம் அதிக நேரம் வானில் பறந்து சாதனை படைத்துள்ளது. வாழ்த்துகள் தக்‌ஷா டீம்... அஜித் சார் உங்களுக்கும்தான்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க