அரக்கோணம் கடற்படைத் தளத்தில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! - உயிர் தப்பிய 4 பேர் | navy helicopter crashed in ins rajali arakonam

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (01/10/2018)

கடைசி தொடர்பு:17:09 (01/10/2018)

அரக்கோணம் கடற்படைத் தளத்தில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! - உயிர் தப்பிய 4 பேர்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படைத் தளத்தில் பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், 4 பேர் காயம் அடைந்தனர்.

ஹெலிகாப்டர்

ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படைத் தளத்தில், ஹெலிகாப்டர் பைலட் பயிற்சிப் பள்ளி இயங்கிவருகிறது. புதியதாகக் கடற்படையில் சேரும் பைலட்களுக்கு இங்கு ஆண்டுக்கு 2 முறை இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் மூலம் ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று காலை பயிற்சிபெறுவதற்கு ஒரு ஹெலிகாப்டரில் பயிற்சியாளர் உட்பட 4 பேர் பயிற்சிக்குப் புறப்பட்டனர். 

ஹெலிகாப்டர் புறப்பட்ட சில விநாடிகளிலேயே பழுது ஏற்பட்டு, பயிற்சித் தளத்திலேயே விழுந்தது நொறுங்கியது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். ஹெலிகாப்டர் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்து சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க