கல்பாக்கம் அணுமின் நிலையங்களில் தீ: மின் உற்பத்தி நிறுத்தம்

சென்னை: சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்தடை நேரம் அதிகரிக்க அபாயம் ஏற்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாம் பிரிவு 110 மெகாவாட் மின் உற்பத்தி செய்து கொண்டிருந்த போது, நேற்று ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மர் பாகத்தில் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது.

டிரான்ஸ்பார்மரில் உள்ள ஆயில் டேங்கரில் வெடிப்பு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பராமரிப்பு பணிகள் முடிந்து 2 நாட்கள் இயங்கிய நிலையில் யூனிட் 2ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இயக்குநர் டி.ஜே.கோட்டீஸ்வரன் கூறுகையில், "தற்போது முதலாம் பிரிவு 170 மெகாவாட் மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. விரைவில் மின்உற்பத்தி தொடங்கும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!