கருணாஸூடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு! | Disqualified T.T.V.Dinakaran support MLAs met Karunas

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (02/10/2018)

கடைசி தொடர்பு:19:15 (02/10/2018)

கருணாஸூடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு!

நடிகர் மற்றும் எம்.எல்.ஏவுமான கருணாஸை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

கருணாஸ்

நடிகர் கருணாஸ் தற்போது திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்துவருகிறார். அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னத்தில் நின்றுதான் தேர்தலில் வெற்றிபெற்றார். இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறையைப் பற்றிக் கடுமையாக விமர்சித்துப் பேசியதால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் வெளியேவந்தார்.

கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய நான்கு எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வதற்கு அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்குக் கடிதம் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தநிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்க தமிழ்செல்வன், கதிர்காமு உள்ளிட்டவர்கள் கருணாஸை சந்தித்துள்ளனர். மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.