நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி! | MLA karunaS admitted in hospital

வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (03/10/2018)

கடைசி தொடர்பு:10:32 (03/10/2018)

நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கருணாஸ்

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கடந்த 16-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரையும், காவல்துறையினரையும் அவதூறாகப் பேசியுள்ளார். இதையடுத்து, முதல்வரை அவதூறாகப் பேசியதால் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. யூடியூபில் வெளியான இந்த வீடியோவை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு அவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் கருணாஸுக்கு கடந்த மாதம் 28-ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

நடிகர் கருணாஸை கைது செய்ய நெல்லை போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில், அவர் இன்று அதிகாலை நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் உடல்நிலை சரியில்லை என்றாலும் 24 மணிநேரத்துக்குள் அவர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையேல் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்தாகிவிடும். இந்த நிலையில், தற்போது கருணாஸ் தரப்பு வழக்கறிஞர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்குச் சென்று கருணாஸுக்கு நேற்று இரவு முதல் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவச் சான்றுகளை ஒப்படைத்துள்ளார். 

2017-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.