வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (04/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (04/10/2018)

`விஜய் முதலில் கட்சி தொடங்கட்டும்!' - எடப்பாடி பழனிசாமி

``ஜனநாயக நாட்டில் யாரும் கருத்து சொல்லலாம். விஜய் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் அதற்குப் பின் அவர் சொன்னதற்குப் பதில் சொல்கிறேன்." என்று நடிகர் விஜய்யின் பேச்சுக்கு மதுரையில் பதிலடி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிச்சாமி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சந்திப்பது பற்றிய அ.தி.மு.க-வின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருகை தந்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 14 அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தேர்தல் வியூகம் பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

எடப்பாடி பழனிசாமி

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ``50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பரங்குன்றம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று சபதம் எடுத்துள்ளோம். அம்மாவின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை திருப்பரங்குன்றம் தொகுதியில் செய்துள்ளோம். இத்தொகுதி மக்கள் விவேகமானவர்கள், ஆர்.கே.நகரில் செய்ததுபோல் தினகரனின் வேலை இங்கு நடக்காது. எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது. விரைவில் எய்ம்ஸ் மதுரையில் அமையும்" என்றனர்.

``அரசை விமர்சித்து நடிகர் கூறியது பற்றி தங்கள் கருத்து என்ன?" என்று நாம் கேட்ட கேள்விக்கு, ``ஜனநாயக நாட்டில் தனி மனிதர் யாரும் கருத்து சொல்லலாம். அவர் ஒரு கட்சி ஆரம்பித்த பின்பு கேட்கட்டும், பதில் சொல்கிறோம்" என்று எடப்பாடி பழனிசாமி பதில் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க