வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (04/10/2018)

கடைசி தொடர்பு:16:22 (04/10/2018)

`போலியோ சொட்டுமருந்து செய்தி வதந்தி; தமிழக மக்கள் பயப்படவேண்டாம்' - சுகாதாரத்துறை செயலாளர்

``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, `பயோமெட்' நிறுவனத்தின் வேக்சினை எங்குமே பயன்படுத்தவில்லை. அதனால், அந்த வாட்ஸ்அப் தகவலைப் படித்து யாரும் பயப்படத் தேவையில்லை''

போலியோ

டந்த இரண்டு நாள்களாக சில ஸ்கூல் வாட்ஸ்அப் குரூப்களில் அந்தச் செய்தி பரபரப்புடன் உலாவருகிறது. '5 வயதுக் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்தை உங்கள் குழந்தைகளுக்கு போட்டுக்கொள்ளாதீர்கள். அது வைரஸ் தாக்கிய கெட்டுப்போன மருந்து (Contaminated Vaccine) என்ற தகவல் தீப்பிடித்ததுபோல பரவிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன்.

போலியோ தடுப்பூசி -  ராதாகிருஷ்ணன்

    ''வேக்சின் எல்லாம் மத்திய அரசுதான் சப்ளை செய்யும். 'பயோமெட்' என்கிற நிறுவனத்திலிருந்து வாங்கிய போலியோ மருந்துகள் வைரஸ் தாக்கி கெட்டுப்போனதாக செய்தி வந்தது உண்மைதான். அந்த நிறுவனத்திலிருந்து வாங்கிய போலியோ தடுப்பு மருந்துகள், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குத்தான் சென்றன. அங்கும் அந்த மருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 'பயோமெட்' நிறுவனத்தின் வேக்சினை எங்குமே பயன்படுத்தவில்லை. அதனால், அந்த வாட்ஸ்அப் தகவலைப் படித்து யாரும் பயப்படத் தேவையில்லை'' என்றார் அழுத்தமான குரலில்.