வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (04/10/2018)

கடைசி தொடர்பு:17:10 (04/10/2018)

போலியோ சொட்டுமருந்தில் வைரஸ்! - `பயோமேட்' நிறுவனத்துக்கு சீல்

தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்ட சொட்டுமருந்துகளில், வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது.

வைரஸ்


இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலிலிருந்து மீளும் வகையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போடப்படுகிறது. இந்நிலையில், தெலங்கானா, மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோவில் வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, காசியாபாத்தில் இயங்கிவரும் `பயோமேட்' என்ற போலியோ சொட்டுமருந்து நிறுவனத்தை மூடி, சுகாதாரத்துறை அமைச்சகம் சீல் வைத்தது. இதேபோல, அதன் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டார்.

இதுதொடர்பான விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 3 மாநிலங்களிலும் சமீபத்தில் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைகள், உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதுகுறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும், சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட சொட்டுமருந்துகளைக் குழந்தைகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளிலும் சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது. இதனால், அம்மாநில மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.