வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (05/10/2018)

கடைசி தொடர்பு:07:17 (05/10/2018)

கரூரில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்பு நடந்த மாதிரி வாக்குப்பதிவு!

 கரூரில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்பு நடந்த மாதிரி வாக்குப்பதிவு!

 கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
 கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வரும் பணி இன்று (4.10.2018) நடைபெற்றது. இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ். ஆய்வுக்குப் பின் அவர் தெரிவித்ததாவது:
``எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தல், 2019 பணிகளுக்காக பெங்களுரில் உள்ள பெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கரூர் மாவட்டத்துக்கு 1,390 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும், 2,560 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்களும் வரப்பெற்றுள்ளது. இந்த இயந்திரங்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறை மற்றும் கரூர் வட்டாட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்திலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேற்படி புதிதாக வரப்பெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் நிலை தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று (4.10.2018) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றன. அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் மாதிரி வாக்குப் பதிவில் கலந்துகொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்து, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரத்தில் பதிவான வாக்கினையும் சரிபார்த்தனர்" என்றார்.