வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (04/10/2018)

கடைசி தொடர்பு:07:29 (05/10/2018)

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார திருக்கோயிலில் குருப்பெயர்ச்சி!

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியிலுள்ள பிரசித்திபெற்ற குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

குருப்பெயர்ச்சி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே  உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார திருக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குச் சரியாக 10.05 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். இந்த குருப்பெயர்ச்சிக்காக இரண்டு தினங்களாக சிறப்பு அபிஷேக ஆராதனைகளான  லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று குருபகவானுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பரிகார ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் கலந்துகொண்டு குருபகவானை தரிசனம் செய்து வருகின்றனர். போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.