வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:08:19 (05/10/2018)

``இனி கெட்ட நேரம் யாருக்கு என தெரியும்” - குருப்பெயர்ச்சி தரிசனத்துக்குப் பின் பன்னீர்செல்வம் மகன்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குருப்பெயர்ச்சி விழாவில் துணை முதல்வரின் மகன் ரவீந்தரநாத் கலந்துகொண்டார். 

ரவீந்தரநாத்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதையொட்டி மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்ப ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டுமென இரண்டு தினங்களாக தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வரத்தொடங்கினர்.

இரவு 10.05 மணிக்குக் குருப்பெயர்ச்சி நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் கலந்துகொண்டு குருபகவானை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பன்னீர்செல்வம் தினகரனைச் சந்திக்க நேரம் கேட்டார் எனத் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகிறாரே என கேட்டனர். அதற்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், ``தற்போதுதான் குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. இனி யாருக்கும் நல்ல நேரம், யாருக்கு கெட்ட நேரம் எனத் தெரியவரும்” என்று சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.