வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (05/10/2018)

கடைசி தொடர்பு:08:37 (05/10/2018)

கனமழை எதிரொலி - 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் இன்று ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர் ஆட்சியர்கள். 

கனமழை

தமிழகம் முழுவதும் இரண்டு நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 7-ம் தேதி தமிழகம் முழுவதும் மிகக் கனமழை இருக்கும் என பேரிடர் மேலாண்மை இயக்குநரகம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையின் பல பகுதியில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்.