வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:12:30 (05/10/2018)

`எல்லா மதத்தவரையும் ஒன்று போலவே பாவிக்கிறேன்!' - வருத்தம் தெரிவித்த மோகன் சி.லாசரஸ்

என் சகோதரர்கள் இப்போதும் இந்து மதத்தையே பின்பற்றுகின்றனர். எல்லா மதக் கடவுள்களையும் சமமாகவே பாவிக்கிறேன்' என்று கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் தெரிவித்துள்ளார்.

மோகன் சி.லாசரஸ்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியில் `இயேசு அழைக்கிறார் ' என்ற பெயரில் மோகன் சி.லாசாரஸ் கிறிஸ்தவ மத போதனை செய்து வருகிறார். இவரது பேச்சைக் கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம். 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த கிறிஸ்தவக் கூட்டத்தில் இந்து மதக் கடவுள்களை பலிப்பது போன்று மோகன் சி.லாசரஸ் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது.

தொடர்ந்து கோவை, நாசரேத் போலீஸ் நிலையங்களில் மோகன் சி.லாசரஸ் மீது வழக்குகள் பதியப்பட்டன. சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ``என் உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் இப்போதும் இந்துக்களாகவே உள்ளனர். இந்து மதத்தையோ இந்துக் கடவுள்களையோ தவறாக உச்சரித்தது இல்லை. எல்லா மதத்தவரையும் ஒன்று போலவே பாவிக்கிறேன். என் பேச்சைக் கேட்டு இந்து சகோதர -சகோதரிகள் வருத்தமடைந்திருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க