வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:00 (05/10/2018)

``நான் ஏன் தற்கொலை செஞ்சுக்க நினைச்சேன்னு தெரியுமா?!" - சின்னத்திரை நடிகை நிலானி

சென்னையைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை நிலானி. இவரைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார், கடந்த மாதம் கே.கே நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக, கே.கே நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அப்போது, சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி வெளியான கருத்துகளால் மனவேதனை அடைந்த நிலானி, கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது, அவர் எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்புகொண்டேன்.

```என்னைச் சிலர் ரொம்ப பயமுறுத்தினாங்க. ஸ்டெர்லைட் பிரச்னை நடந்தப்போ, நான் காவல்துறைக்கு எதிரா பேசினதை மனசுல வெச்சுக்கிட்டு என்னைக் கைது பண்ணிடுவாங்கன்னு சொன்னாங்க. ஆனால், போலீஸ்காரங்க அப்படி நடந்துக்கலை. 'நிலானி மேலே எந்தத் தப்பும் இல்லை. அவங்க ரெண்டு பேரும் நெருங்கிப் பழகி போட்டோ எடுத்துகிட்டதாலே காந்தி ல்லலித்குமாரின் தற்கொலைக்குக் காரணமா சொல்லிட முடியாது'னு எனக்காக சப்போர்ட் பண்ணினாங்க. என் மேலே தப்பு இல்லைன்னு எனக்குப் பக்கபலமா இருந்த காவல்துறைக்கு என் நன்றியை சொல்லிக்கிறேன்.

நிலானி

நான் தற்கொலைக்கு முயன்றதுக்கு முக்கியக் காரணம், அவர் உயிருடன் இருக்கும்போது பார்த்துட்டு வந்து பயங்கர மனஅழுத்தத்துல இருந்தேன். மறுநாள், அவர் இறந்துட்டது தெரிஞ்சதும் எப்படி வருத்தப்படாம இருக்க முடியும்? என்னால சாப்பிட முடியல; தூங்க முடியலை. அவர் இறந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே முடியலை. அப்போ, சமூக வலைதளங்களில் என்னை அசிங்க அசிங்கமா சித்திரிக்க ஆரம்பிச்சாங்க. அது இன்னும் மன வேதனையைக் கொடுத்துச்சு. 'நாம எந்தத் தப்பும் பண்ணலையே. நம்மளை இவ்வளவு கேவலமா பேசுறாங்களே'னு ஆதங்கத்துல தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தேன். என் குழந்தைகள் பற்றியும் யோசிக்காமல் சட்டென ஒரு ஆவேசத்துல வீட்டிலிருந்த கொசு மருந்தைக் குடிச்சுட்டேன். என்னைத் தப்பா பேசுறாங்கன்னுதான் சாக நினைச்சேனே தவிர, போலீஸ் கைது பண்ணிடும்னு நினைச்சு தற்கொலை பண்ணிக்க நினைக்கலை'' என வேதனையை வெளிப்படுத்திய நிலானி, தொடர்ந்து பேசினார்.

``ஜமீலா என்கிறவருக்கு ரொம்ப நன்றி சொல்லியே ஆகணும். அவங்கதான் மருத்துவமனையிலிருந்த எனக்கு கவுன்சிலிங் கொடுத்து சரியாகிற வரை என்னைப் பார்த்துக்கிட்டாங்க. செத்துடணும்னு என்ற மனநிலையில் இருந்த நான், இப்போ 100 சதவிகிதம் மாறிட்டேன். பெரிய இடத்துக்கு வரணும் என்கிற தைரியம் வந்திருக்கு. என்னைப் பற்றி நெகட்டிவா பேசினவங்களில் சிலரும் இப்போ என்னைப் புரிஞ்சுகிட்டு சப்போர்ட்டா இருக்காங்க. உலகம் முழுவதும் நிறைய பேர் போன் பண்ணி சப்போர்ட் பண்ணாங்க. அவங்க அன்புதான் என்னை மீட்டிருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி, திரும்ப நடிக்கும் மனநிலையிலே இல்லை. இந்தச் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்ற சங்கடத்தில் இருந்தேன். இப்போ, நடிக்கத் தயாராகிட்டேன். முன்னாடி நான் பண்ணிட்டிருந்த புராஜெக்ட்ஸ் குளோஸ் ஆகிருச்சு. இப்போ, வாய்ப்புக்காக காத்திருக்கேன். என்னை சப்போர்ட் பண்ண பொதுமக்கள், போலீஸ், மீடியா எல்லோருக்கும் நன்றியைச் சொல்லிக்கிறேன். எல்லோர் முன்னாடியும் நல்லா வாழ்ந்து காட்ட நினைக்கிறேன்'' என்கிறார் நிலானி தெளிவான குரலில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க