வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:40 (05/10/2018)

`வர்லாம் வர்லாம் வா!' - விஜய் பேச்சுக்கு கமல்ஹாசன் வரவேற்பு

 நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன்

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்பதில் எங்கள் கட்சி ஆணித்தரமாக உள்ளது. அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பசுமை தீர்ப்பாயத்திடம் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் மனு அளிக்கப்படவுள்ளது. மக்களுக்கு உயிர்ச் சேதம், சுற்றுச்சூழல் சேதம் ஏற்படுத்தாத ஆலைகள் வரலாம். ஸ்டெர்லைட் ஆலை விரிவுபடுத்தப்பட்டால் உலகில் மிகப்பெரிய காப்பர் ஆலையாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலை தமிழகத்துக்குத் தேவையில்லை. முன்னேற்றத்தை என்றும் வரவேற்கிறோம். முன்னேற்றம் என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். 

ஒரு முதலாளிக்கானதாக இருக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் விலையை அதிகமாகக் கூட்டிவிட்டு கொஞ்சமாகக் குறைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" எனக் கூறினார். அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``தம்பி விஜய் அரசியலுக்கு வர ஆர்வம் இருந்தால் வரலாம். அதை நான் வரவேற்பேன். ஊழலுக்கு எதிரான கட்சியாக வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க