வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (05/10/2018)

கடைசி தொடர்பு:16:45 (05/10/2018)

15 வகையான கட்டணங்கள் உயர்வு! - போராட்டத்தைத் தொடங்கிய திருச்சி மாணவர்கள்

ல்லூரிகளில் கட்டணங்களை உயர்த்தியதைக் கண்டித்து திருச்சியில் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
 
திருச்சியில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிலிருந்து விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம், செய்முறை தேர்வுக் கட்டணம், மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம், பட்டயச் சான்றுக்கான கட்டணம் என 15 வகையான கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த முடிவுக்கு எதிராக மாணவர்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
 
இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் இடையே கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி முன்பாக, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம், இன்ஸ்டன்ட் கட்டணம், மறு கூட்டல் கட்டணம் ஆகியவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இதுவரை வழங்கப்படாத இலவச பஸ் பாஸை உடனடியாக வழங்கக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், "மாணவர்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட கட்டணங்களை பல்கலைக்கழக நிர்வாகம் வாபஸ் பெற வேண்டும்" என்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க