வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:17:00 (05/10/2018)

` தேர்தலுக்காகத்தான் இவ்வளவு அடக்குமுறை!' - மதுரையில் கொதித்த முகிலன்

ல்லிக்கட்டுப் போராட்ட விவகாரத்தில், சூழலியல் ஆர்வலர் முகிலன் உட்பட 64 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

முகிலன்

கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்துக்காகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்ட முகிலன், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கில், கடந்த 26-ம் தேதி ஜாமீனில் விடுதலை ஆனார். இந்நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்துவந்த சிபிசிஐடி போலீஸார், முகிலன் உட்பட 64 பேர்மீது குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல்செய்தனர். இதைத் தொடர்ந்து, முகிலன் உள்ளிட்ட 64 பேர்களுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனை அடுத்து, இன்று முகிலன் உள்பட 64 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், " தமிழக வரலாற்றில் புதிய மாற்றம் படைத்ததில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் மிக முக்கியானது. அதில் போராடியவர்களைக் கடுமையான வதைக்கு உட்படுத்தினர். இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. எனவே, அந்த உண்மைகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடக் கூடாது என்பதால்தான் அரசு அடக்குமுறைகளை ஏவிவிடுகிறது" என்றார்.