வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (05/10/2018)

கடைசி தொடர்பு:19:26 (05/10/2018)

`முகநூல் பதிவால் நல்லடக்கம் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத நபர்’

ரசு மருத்துவமனையில் இறந்துபோன ஒருவரின் பிரேதத்தை, முகநூல் பதிவின் மூலம் கிடைத்த நண்பர்களின் உதவியால் நல்லடக்கம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்லடக்கம்

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், சிவகங்கை மாவட்டம், திருவேகம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடல் நலிவுற்று வந்திருக்கிறார் 70 வயது முதியவர் ஒருவர். தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சைப் பலனில்லாமல் இன்று காலையில் இறந்துபோனார் அவர். அவரின் உடல் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இறுதிச்சடங்கு செய்வதற்கு ஆளில்லாமல் போகவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் இமயம் சரவணன் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்கள் காவல்துறையினர். இமயம் சரவணனும் இறுதிச் சடங்குக்கு உதவுமாறு முகநூலில் செய்தியொன்றைப் பதிவிட்டிருக்கிறார். பதிவைப் பார்த்து வைரவன் என்பவர் இறுதிச் சடங்கு செய்து நல்லடக்கம் செய்ய உதவியிருக்கிறார். 

பதிவு

இதுகுறித்து சமூக ஆர்வலர் இமயம் சரவணன் பேசும்போது,

`` இறுதிச் சடங்குக்கு உதவுங்கள் நண்பர்களே என்று முகநூலில் ஒரு செய்தி ஒன்றைப் பதிவிட்டேன். தகவல் கேள்விப்பட்டு, தொடர்ச்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வைரவன் என்பவர் வந்து உதவினார். இறுதிச் சடங்குகள் செய்து நல்லபடியாக நல்லடக்கம் செய்துவிட்டோம்’’ என்றார் அவர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க